இலங்கைக்கு எதிரான நிபுணர் குழுவில் எட்டுப் பேர்! தலைவராக நவியின் சகா நியமனம் பெறுவார்

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறுகின்றமைக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மூன்று பேர் கொண்ட ஐ.நா நிபுணர் குழு எட்டுப் பேர் கொண்ட குழுவாக விஸ்தரிக்கப்பட உள்ளது.

இந்த எட்டுப் பேர் கொண்ட நிபுணர் குழுவின் தலைவராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நெருங்கிய சகாவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான ஜெசிக்கா நியூவேர்த் நியமிக்கப்பட உள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதி ஒருவர் மூலம் இத்தகவல் கசிந்துள்ளது.

மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை விட இந்த எட்டுப் பேர் கொண்ட இந்நிபுணர் குழு மிகவும் பலமான நிலையில் இருக்கும் இதற்கு கூடுதலான அதிகாரங்கள் காணப்படும் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் மஹிந்த அரசு அச்சத்தில் மூழ்கி இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.