மூங்கிலாறுப் பகுதியில் மண்ணெண்ணை “”பரல்’ மீது ஷெ­ல் வீழ்ந்ததால் 13 பேர் கருகி பலி

முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்திய சாலைக்கு முன் பாக வீழ்ந்து வெடித்த எறிகணையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எறிகணை தாக்குதலில் காயமடைந்த அவர்கள் தங்கியிருந்த வீட்டில் உள்ள மண்ணெண்ணை “பரல்” தீப்பிடித்ததில் கருகிப் பரிதாபமாக மரணமானார்கள் எனத் தெரிவிக்கப் பட்டது.

காயமடைந்த அவர்களை வைத்திய சாலைக்கு எடுத் துச் செல்ல ஏற்பாடு செய்த வேளையில் வந்துவீழ்ந்த எறிகணையால் அங்கிருந்த மண்ணெண்ணை “பரல்” தீப்பிடித்து எரிந் ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் சிக்கி காயமடைந்த 13 பேரும் உடல் கருகிப் பலியானார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.