அதியுயுர் பாதுகாப்பு வலயம் குறித்த கெஹெலியவின் கருத்துக் குறித்து எனக்குத் தெரியாது – டக்ளஸ்

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஒருபோதும் நீக்கப் போவதில்லை என ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்த கருத்துக்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஒரு போதும் அகற்றுவதில்லை என அமைச்சரவை ஒருபோதும் தீர்மானிக்கவில்லை எனவும் இது குறித்து கிளிநொச்சி அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரவையில் ஒரு முக்கிய இடத்தை வகிப்பவன் என்ற வகையில் இதை உறுதியாகக் கூற முடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்றப்படும் என டக்ளஸ் தேவானந்தாவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது என கெஹெலிய றம்புக்வெலவும் ஒரே நாளில் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.