தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிணையில் விடுதலை

வேலணை வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிரியந்த செனவிரட்ண யாழ் மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுளார். அவரை பிணையில் விடுவிப்பதற்கு அரச சட்டத்தரணி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

மேற்படி மருத்துவரை கைது செய்யுமாறு நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.