திருகோணமலைத் துறைமுகத்தில் முதல் தடவையாக இரு நாட்டு போர்க் கப்பல்கள்!

திருகோணமலைத் துறைமுகத்தில் முதல் தடவையாக இரு நாட்டு கடற்படை கப்பல்கள் ஒன்றாக தங்கியுள்ளன.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் கடந்த புதன் கிழமை திருக்கோணமலை துறைமுகத்தை வந்தடைந்து விசேட நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றது.

இந்நிலையில் “ஐ.என்.ஸ் நிருபக் ” என்கிற இந்தியக் கடற்படைக் கப்பலும் வியாழக்கிழமை மாலை திருக்கோணமலையை வந்தடைந்தது.

இந்திய-அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இலங்கைக் கடற்படை கூட்டுப் பயற்சியில் ஈடுபடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.