தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானமையை எதிர்த்து சீமான் வழக்கு!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளார்.

இது குறித்து சீமானின் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் கூறியவை வருமாறு:-

”எந்த காரணமும் இல்லாமல் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தனிமை சிறையில் அடைத்து அவர் கொடுமைப்படுத்தப்படுகிறார். தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பேசினார் என்பதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கின்றமை கண்டிக்கத்தக்கது.

இந்த சட்டத்தில் சீமானை கைது செய்தமையை எதிர்த்து வழக்கு தொடருவோம். தேசிய பாதுகாப்பு சட்ட மறுஆய்வுக் குழுவிலும் மேன்முறையீடு செய்வோம்.

ஏற்கனவே ஒரு முறை சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தோம். இரண்டு மாதத்திலேயே அவரை வெளியே கொண்டு வந்தோம்.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.