கவிதை: தமிழன் விழித்து விட்டான்

போரினால் பல லட்சம் தமிழன்   பங்கரில்  பதுங்கி வாழ
ஒட்டியவயிறும் வறண்டநாக்கும் உறக்கம் காணாகண்களும்
 
பெற்றதாய் மண் எனஎண்ணி நமைநோக்கி பார்த்திருக்க
திடீர் உண்ணாநோன்பிருந்து  முடித்தவுடன் எம் முத்தலைவன்

போர்முடிந்தது ஓடிவா என அழைக்க அதை
நம்பி யோடி தப்பி வந்த தமிழர் கூட்டம் 
 
கொத்துகுண்டுகளால் கொத்து கொத்தாய் செத்துவிழ
அதை கண்டு காணாமல் கொன்றொழித்த கர்வத்தில்
 
முத்தமிழன் கொக்கரிக்க அதையறிய மடத்தமிழன்
முப்பதாண்டு கால புலித்தலைவன் தோற்றான்
 
மூன்று மணித் துளி உண்ணாமலிருந்து  
எம்முத்தலைவன் காத்தான் எனஎண்ணி
 
 ஊரறிய உலகறிய கூப்பாடு போட்டு குதியாட்டம் போட்டான்
இன்று ஒருசாண் வயிற்றுக்கு எம்மீனவன் கடல் செல்ல
 
ஆண்டாண்டு  கடல் காத்த புலிப்படை இல்லாது கண்டு 
சிங்களவன் சிரித்து  காத்திருந்து தமிழா உன்னுயிர் எதற்கென்று
 
மறுநாள் சுட்டு நிர்வாண மரணித்து வந்தான் எம்மண்ணை நோக்கி
வாழ வழியின்றி கேட்போர் யாரின்றி மீனவனிங்கே தவிக்க
 
வந்தான் புலிதலைவனின் தம்பியாக    சீமானாய் சினந்து நிற்க
பின்னால் மீனவனுயிர்  காக்க நாம் தமிழர் படை கண்டு 
 
அஞ்சி நடுங்கி கைதாக்கி கொண்டு சென்றான் தனிமை சிறையில்
அஞ்சுமோ  நாம்தமிழர் படைகூட்டம் புயலாய் புறப்பட்டது  மீனவனுயிர் காக்க
 
இனி உன்  திராவிடச்  சதியில் வீழ்ந்த தமிழன் விழித்து விட்டான்
தேசிய தலைவரின் தலைமையின் கீழ் நடக்க துணித்து விட்டான்
 
புலித்தலைவன் தம்பியடன்  தமிழீழம் காக்க புறப்பட்டு விட்டான் 
முத்தமிழே இனி நடக்காது உன்வேலை சீமானின்  நாம்தமிழர் வந்துவிட்டோம்.

தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
9940024227

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.