சீன சிறைக் கைதிகள் இலங்கை அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சீன சிறைக் கைதிகள் இலங்கை அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் போன்றவற்றில் பணியாற்றும் பெரும்பான்மையான சீனத் தொழிலாளர்கள் அந்நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகள் என சுட்டிக்காட்டப்படுகிறது.
 
சீனச் சிறைச்சாலைகளில் காணப்படும் சன நெரிசல் காரணமாக இவ்வாறு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் கைதிகளை சீனா, பணியில் ஈடுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும், பெரும்பான்மையான இலங்கையின் கிராமப்புற இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் தருணத்தில் இவ்வாறு சீனர்களுக்கு தொழில் வாய்ப்பு அளிப்பது எந்த வகையில் நியாயமானதென சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள மீண்டும் குற்றவாளி சமூகமொன்றை நாட்டிற்குள் அனுமதிப்பது எந்த வகையில் புத்திசதூரியமானதென கேள்வி எழுப்பியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.