ஒட்டோவா இலங்கைத் தமிழ் அகதி அமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளது?? – கனடா

ஒட்டோவா இலங்கைத் தமிழ் அகதி அமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக கனேடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
குறித்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறக்கட்டளைகளை பதிவு செய்ததன் அதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கனேடிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த அமைப்பு 713000 டொலர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த அமைப்பின் சார்பில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர், புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.