200 இலங்கையர்களைக் கொண்ட கப்பல் குவந்தனாமோ கடற்பரப்பை அண்மித்துள்ளது

200 இலங்கையர்களைக் கொண்ட கப்பல் குவந்தனாமோ கடற்பரப்பை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் நோக்கில் குறித்த கப்பல் பயணிகள் பல நாட்களாக கப்பலில் பயணித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும், 19 இந்தியத் தமிழர்களும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தக் கப்பல்  தொடர்பில் கனேடிய அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குறித்த சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களிடையே தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருக்கக் கூடுமென சந்தேகம வெளியிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.