எமது கடமை …செய்வோம்

விடுதலைப் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சொந்தம் அதே போல் போராட்டத்தால்வரும் கஷ்டங்களும் துன்பங்களும் எல்லோரும் ஒன்றிணைந்து பங்குகொள்ள வேண்டும் .ஒன்றினைந்துநாம்
மனஉறுதியுடன் போராட்ட ஆரம்ப காலத்தில் எப்படி ஆரம்பித்தோமோ அதேபோல் எல்லோரும் தமிழுக்காகமீண்டும் ஒருமுறை ஆரம்பிக்க
வேண்டிய காலத்தின் கட்டாயம் எம் முன்னுள்ளது .அமைதிவழி ,அஹிம்சாவளி ,ஆயுத போராட்டம்என விரிவுபட எமது போராட்டம் உலகை
உலுக்கியதால் உலகம் தந்திரமாக எமது போராடத்தை அழித்தேவிட்டது .
ஆரம்ப காலத்தில் எமது போராட்டம் நவீனமயப்படாமல் ஆரம்பித்த போது இல்லாத பிரச்சனைகள் இப்போது ஆரம்பித்துஎமது தமிழ் தாயின் இதயத்தில்
குத்தி கீறி கிழித்துவிட்டது.அதற்கு மருந்து எம்மால் கொடுக்க முடியாவிட்டாலும்வெந்த புண்ணில் வேல்பாச்சாமல் இருக்கஎம் மக்களினது
பெயராலும் மாவீரது பெயராலும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு …
எமக்கு தேவை தமிழனின் நிம்மதியான வாழ்வுடன் கூடிய சுயநிர்ணய உரிமை .இதற்கு எம் முன் இருக்கும் ஒரே வழி சிறந்த
புலனாய்வு வலையுடன் கூடிய தந்திரப்போர்….! .இவ் உலகம் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மின விடுதலையை அழிக்க உறுதுணையாக
நின்றதன் பலனை உலகம் தற்போது பொருளாதார வீழ்ச்சி எனும் போரை அனுபவித்து கொண்டு வருகிறதை கண்கூடாக பார்க்கலாம்.
அன்பான தமிழ் பேசும் மக்களே ..
எமது போராட்டம் சரிய காரணமாக இருந்த வரலாற்று தவறுகளை திருத்தி மீண்டும் எமது போராடத்தை ஆரம்பகாலத்தை
நோக்கி நகர்த்தி அப்போராட்டம் சிறந்த புலனாய்வு கட்டமைப்புடன் அமைதி வழியற்ற ஆயுத வழியற்ற அஹிம்சவளியற்ற .,
ஒரு மகாதந்திரோபாய போரை நாம் இலங்கை அரசுக்கெதிராகவும்,சர்வதேச வலைபின்னலுக்கு எதிராகவும் ஏற்படுத்தி
எமது போராட்ட நியாயத்தையும் எமது தமிழின் தலை குனியா தன்மையை அவர்களுக்கு அவர்களின் பாசையில் புரிய
வைப்போம்.தமிழ் பற்று இரத்தத்தில் இருக்கவேண்டும் தமிழனாய் பிறந்தவனுக்கு …..இல்லாவிடில் எல்லாவற்றையும் விட்டு
ஒதுங்குவது தமிழுக்கும்,அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழினத்துக்கும் மிக நல்லது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.