வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள்

வன்னிப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்களையும் ஈடுபடுத்துவதற்கு எவ்.எஸ்.டி எனப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக எவ்எஸ்டி நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான திட்டப் பணிப்பாளர் நைஜல் றொபின்சன் கருத்து வெளியிடுகையில்,

போர்ச்சூழலில் கணவனை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் இருப்பதால் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் எவ்.எஸ்.டி நிறுவனத்தினால் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கண்ணிவெடிகள் மிகவும் அடர்த்தியாக்க காணப்படுகின்றன.

கண்ணிவெடி அகற்றும் பணியில் நவீன கருவிகள், தொலைக் கட்டுப்பாட்டு கருவி மூலம் இயக்கத்தக்க இயந்திரங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.