முன்னேற்றம் குறித்து இலங்கை செல்லும்

இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்வார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்திலேயே இந்தத் தகவலை இந்தியப் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இந்தியா உதவி வரும் நிலையில், அந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை செல்லும் இந்த இந்திய உயரதிகாரி ஆராய்வார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு செல்லும் இந்திய அதிகாரி அங்குள்ள இந்தியத் தூதர் மற்றும் இலங்கை அரச தரப்பினருடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனவும் தமிழக முதல்வருக்கு இந்தியப் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வடக்கு – கிழக்கு நிலை குறித்து இந்தியா கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையினை இந்த விஜயம் வெளிப்படுத்துகிறது எனவும் டாக்டர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.