இலங்கைக் கடவூச்சீட்டுகளை வைத்துள்ளவர்கள் கடவூச்சீட்டின் கடைசி பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை முழுமைப்படுத்தியிருக்க வேண்டும்

இலங்கை கடவூச்சீட்டுகளை வைத்துள்ளவர்கள் கடவூச்சீட்டின் கடைசி பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை முழுமைப்படுத்தியிருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு, விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த விபரங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அந்த விபரங்களை பூர்த்தி செய்த பின்னரே நாட்டுக்குள் நுழையவும் நாட்டில் வெளியேறவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

அத்துடன் குடியகல்வு மற்றும் குடிவரவு படிவங்களை பரீட்சிக்கும் போது, இந்த விபரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.