ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான போட்டியில் பான் கீ மூனை தோற்கடிக்க சிறிலங்கா திட்டம்

ஐ.நா.பொதுச்செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு தடுக்கும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் ஏனைய நாடுகளின் ஆதரவைக் கோரவுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அந்த அமைச்சர், இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியா, ரஸ்யா, பிறேசில், சீனா மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், பான் கீ மூன் மீண்டும் ஐ.நா பொதுச்செயலராவதைத் தடுக்கும் வகையிலான பரப்புரைகளை சிறிலங்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளது.

நிபுணர் குழுவை அமைத்துள்ளதால், பான் கீ மூனுக்கு ஆதரவாக சிறிலங்கா வாக்களிக்க மாட்டாது.

அதேவேளை இந்தப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடமும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று சிறிலங்கா கோரிக்கை விடுக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பதவிக்காலம் 2011 டிசெம்பர் 31ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

எனினும் அவர் மீளவும் இந்தப் பதவிக்கு போட்டியிட முடியும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.