பாலகுமாரன், யோகியின் நிலை என்ன? கேள்வியால் குழம்பிய அமைச்சர் ரம்புக்வெல

இறுதிப்போரின் போது சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளி்ன் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், யோகி ஆகியோரின் நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியால் குழப்பமடைந்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அதுபற்றி அடுத்த வாரம் பதிலளிப்பதாக காலஅவகாசம் கோரியுள்ளார்.

பாதுகாப்பு ஊடகத் தகவல் மையத்தில் நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கிய தலைவர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிமாரை விதவைகள் என்று அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் எப்படி விதவைகளாகினர் என்று என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குழப்பமடைந்தார்.

பின்னர் சுதாகரித்துக் கொண்டு அவர் கேள்வியை மீண்டுமொரு தடவை எழுப்புமாறு அந்த ஊடகவியலாளரிடம் கேட்டார்.

பின்னர், அந்த ஊடக அறிக்கை தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டு அடுத்த வாரம் பதிலளிப்பதாகவும் கூறி நழுவிக் கொண்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.