பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கில் கறுப்புயூலை கவனயீர்ப்பு நிகழ்வு.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மிகக் கொடுமையான இனப்படுகொலை புரிந்து 27 ஆண்டுகள். தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னமும் வலியைத் தந்து கொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.

ஸ்ராஸ்பூர்க் நகரின் மத்தியபகுதியான Pடயஉந மடநடிநச என்னுமிடத்தில் (23.07.2010) வெள்ளிக்கிழமை பி.பகல் 3.00மணியளவில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு கவயீர்ப்பு நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.

கூடியிருந்த உறவுகள் கைகளில் பதாதைகளைத் தாங்கியவாறு வட்டவடிவத்தில் நின்று கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். அதிலும் முக்கியமாக பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திர. அர்னோல்ட் யுங் அவர்களும், மாநகர உதவி முதல்வர்
திரு. எறிக் எல்குபி அவர்களும் வருகைதந்து உற்சாகம் தந்தனர்.

ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் திரு. கிருபானந்தன் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய நாளில் லண்டனில் இருந்து, ஜி. சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடைப் பயணம் மேற்கொள்ளகின்றார் எனவும், மத்திய லண்டனில் இருந்து நடைப் பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், டோவர் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் கலே, பாரீஸ் நகரம், லியோன் நகரம் ஊடாக சுவிற்சலாந்தின் ஜெனீவா நோக்கி நடந்து செல்லவுள்ளார்.

சுமார் இரண்டு கிழமைகள் வரை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிவந்தன் அவர்கள் எதிர்வரும் 06.08.2010அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை சென்றடைவார் எனவும், அங்குள்ள முருகதாசன் திடலில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளதாகவும், உலகம் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அர்ப்பணிப்புடனும், உற்சாகத்துடனும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென உரையாற்றியிருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.