விலை போன ஈழத் தமிழனின் உயிர் – தமிழ் தேவன்

வீராணம் கருணா

குடிக்க தண்ணீரின்றி தமிழன் ஏங்கி தவிக்க
தவித்த வாய்க்கு தண்ணீர் தர திராவிடம் மறுக்க

தமிழனுக்கு நீ அமைத்ததோ வீராண திட்டம் – அதில்
நாட்டுக்கு நீ புரிந்த ஊழலால் பல கோடி நட்டம்

தண்ணீர் வருமென்று கண்ணீரில் காத்திருக்க
கண்களில் கண்ணீர் வந்தது கானல் நீர் கண்டு

உயிர்போகும் நிலையிலும் தண்ணீர் வரவில்லை
தமிழன் செத்தாலும் உனக்கு கவலையில்லை

வீராண திட்டத்தில் பல கோடி ஊழல்
உண்ணும் விவசாய மண்ணில் விஞ்ஞான ஊழல்

பலகோடி பணநட்டம் நாட்டுக்கு பலன் கண்டு – இளவயதில்
பலதார மணம் புரிந்து நானும் பச்சை தமிழனென்றாய்

ஸ்பெக்ட்ரம் கலைஞர்

முத்தார மணம் புரிந்து இடைவிடாது பெற்றெடுத்தாய்
பெற்றெடுத்த பிள்ளைக்கு அயராது பாடுபட்டாய்

ஈழ தமிழன் செத்தொழிய தலைமுறைக்கும் சொத்தெடுத்தாய்
உந்தன் வாரிசுகள் சொகுசாய் வாழ வழி வகுத்தாய்

இளிச்சவாயன் தமிழனென்று நீ உணர்ந்தாய்
உன் காரியத்தை செயல்படுத்த மனம் துணிந்தாய்

உன் அப்பன் வீட்டு சொத்தென்று நீ நினைத்தாய்
அதனால் தமிழ்நாட்டை இரண்டாக நீ பிரித்தாய்

தென்னாட்டை கொடுத்திட்டாய் இளையவனுக்கு
வடநாட்டை அளித்திட்டாய் மூத்தவனுக்கு

பலநூறு கோடி ஊழல் செய்தும் போதவில்லை – உனக்கு
பல்லாயிரம் கோடி தேவை என்று நீ நினைத்தாய்

இத்தாலி இந்தியாவிடம் இனிதாய் ஒப்பந்தம் போட்டாய்
ஈழத் தமிழனை கூண்டோடு அழிக்க திட்டம் போட்டாய்

பல லட்சம் தமிழரை பலி கொடுத்தால் – உனக்கு
பல்லாயிரம் கோடி பணம் என்று இத்தாலி கூற

போர் முடிந்தது ஓடி வா என நீ உரைக்க – அதனை
நம்பியோடி வந்த தமிழர் கூட்டம் லட்சத்தில் உயிர்துறக்க

உன் ஐம்பதாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் எளிதாய் நடந்தது
உன் இத்தாலி ஒப்பந்தம் இனிதே முடிந்தது

பலநூறு உயிர்கள் இழந்தும் புத்தி வரவில்லை தமிழனுக்கு
பலலட்சம் உயிர்கள் இழந்தும் கிடைக்கவில்லை தமிழீழம் எங்களுக்கு

இளிச்சவாய தமிழன் இனி விழிக்க போவதில்லை
என்றெண்ணி இறுமாந்து நீ இருக்க- இரும்பென

உன் இறுமாப்பை பொடியாக்க வந்துவிட்டான் சீமான்
“நாம் தமிழர் இயக்கத்தை” உருவாக்கி தந்து விட்டான் எம்கோமான்

இனி இளிச்சவாய தமிழனாய் இருக்க போவதில்லை ! வரும்
காலங்களில் உன் துரோகங்களை பொருக்கபோவதில்லை


தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
9940024227

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.