புலத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கச் சதி?

சிறிலங்கா தூதராலயத்தின் மறைமுக செல்வாக்குடன் புலத்தில் உள்ள தமிழர்களையும், தமிழ்த்தேசியத்தையும் விளையாட்டு என்ற பெயரில் சதிவலைக்குள் வீழ்த்தும் திட்டம் ஒன்று தற்காலிகமாக பிரித்தானியத் தமிழர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் எயார் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் லண்டனில் உள்ள ஒரு தமிழ் விளையாட்டு கழகமும் இணைந்து, பிரித்தானியாவில் இருக்கும் இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும், தென்பகுதியில் உள்ள சிங்களப் பாடசாலைகளுக்கும் இடையிலான துடுப்பெடுத்தாட்டத்தினை நடாத்த முனைந்திருக்கிறது. இதில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சும் மறைமுகமாக ஈடுபட்டிருந்ததை தற்போது அறிய முடிகிறது.

இப்படியான ஒரு பாரிய நிகழ்வை சகல தமிழ்ப்பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்களுடன் முறையாக கலந்தாலோசிக்காது பின் கதவு வழியாக அணுகியதன் முலம் இவர்களின் பிரச்சார சதிவலையும் மறைமுக நோக்கமும் மிகவும் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் உண்மை நிலைமை அறிந்த ஊடகம் இணையம் பிரித்தானியாவில் உள்ள தமிழ் பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்களின் விளையாட்டுக் கழகங்களிடம் மினன்சலூடாக கேட்டபோது யாழ்.பரியோவான் பாடசாலை (Jaffna St John’s College OBA ) விளையாட்டுக் கழகம் உறுதியாக மறுத்துள்ளது, மேலும் தமக்கு எதுவித உத்தியோக பூர்வ அழைப்பையும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக்களகம் (TSSA UK) விடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஏனைய விளையாடுக் கழகங்களான யாழ் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியன வற்றிடம் இருந்து இச் செய்தியாக்கும் வரை எதுவித பதிகளும் கிடைக்கப்பெறவில்லை.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் TSSA (UK) இ ந்த விளையாட்டு போட்டிகளுக்கு எதுவித பங்களிப்பும் செய்யாது என்று அறிவித்துள்ளது.

இதேவேளையில் இன்னும் சில பாடசாலைகளின் சரியான தொடர்பு கிடைக்கவில்லை.

ஆகவே அனைத்து விளையாட்டுக் கழகங்களும் இச் செய்தியை தங்களது தனிப்பட்ட அறிவித்தலாக ஏற்று தங்கள் கழகத்தின் :நிலைப்பாடு பற்றி எமக்கோ அல்லது பொது ஊடக அறிவித்தலாக தருவதே பொருத்தமானதாகும். பழையமாணவர் சங்கங்கள் சனநாயக விழிமியங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யற்குழுக்களுடன் இயங்கும் சமூக அமைப்புக்களாகும். அவர்கள், முடிவுகளை வெளிப்படையாகவும், செயற்பாடுகளில் வெளிப்படு தன்மையும் (Transparency), பொறுப்புக்கூறும் தன்மையும் (Accountability) கொண்டிருக்க வேண்டும்.

சிறிலங்காவின் வடக்கு-கிழக்கு பகுதியில் முடக்கப்பட்டு பூர்வீக இருப்பிடத்திலேயே அகதிகளாகவும், முகாம்களில் முடக்கப்பட்டும், சிறைச்சாலைகளில் வாயால் கூறமுடியாத அளவுக்கு துன்பங்களையும் மழலைகள் தொடக்கம் முதியவர்கள் வரை, பால் வேறுபாடின்றி, சமூகவெருபாடின்றி, தொழில் வேறுபாடின்றி, அங்கவினமானவர்கள், கருத்துவழி வேறுபாடின்றி அனைத்து தமிழ் மக்களும் சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அங்குள்ள இராணுவத்தினாலும் கடும் துன்பச்சிலுவையை சுமந்து கொண்டிரக்கின்றார்கள்.

இதனை மூடிமறைப்பதற்காகவும் கடந்தகாலங்களில் இராணுவமும் அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய போர்குற்றங்களை மூடி மறைப்பதற்காகவும், புலத்தில் உள்ள தமிழ் மக்கள், “சிங்கள மக்களும் பின்னிப் பிணைந்த உறவுகளாக இருக்கின்றோம்” என உலகத்திற்கும், மனிதநேய அமைப்புக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சாரம் செய்ய இந்த சதிவலை தீட்டியுள்ளது சிறிலங்கா அரசு.

அதே நேரத்தில் இம்முயற்சி தோல்வியடையும் போது தமிழ் அமைப்புக்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுதுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்பது தற்போது தெளிவாகப் புலப்படுகிறது. எனவே இப்படியான பல நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நிகழும், புலம் பெயர் தமிழர்கள் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும்.

இது தொடர்பாக கணேஷ் ரவீந்திரன் என்ற கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் கருத்து தெரிவிக்கையில் ” சிங்கள்வர்களுடன் விளையாடுவதில் எமக்கொரு பிரச்சினையும் இல்லை ஆனால் அது எப்போதென்றால், இலங்கைத்தீவில் தமிழர் ஒரு தேசிய இனம், எமது தாயகப்பிரதேசம் மற்றும் எமது பூர்வீக உரிமைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் போது நாம் இரு இனங்களும் இணைந்து விளையாடலாம். ஆனால் இன்று அது சாத்தியம் இல்லை….. இதேபோன்று தான் தென்னாபிரிக்காவையும் உலகம் கையாண்டது.” என்று அவர் தெரிவித்தார்.

இது பற்றி பிரித்தானியாவில் பிறந்த ஒரு ஈழத்தமிழ் இளைஞ்ஞ்னைக் கேட்டபோது, “ஹிட்லரின் கொடிய அரசு அழிந்து 60 வருடங்ககுக்கு மேலான போதும் யூத இன மக்கள் உலகில் எங்கிருந்தாலும், இன்றும் ஜெர்மனியப்பொருட்களை கொள்வனவு செய்வதில்லை. அவர்களின் இன உணர்வும் ஒற்றுமையுமே இவர்களை ஒரு சக்தி வாய்ந்த மக்கள் கூட்டமாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதேவேளையில் இன்றைய மிகச்சிக்கலான சமூகப்பொருளாதார அரசியலில்: அரசியல், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, கலை எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திதுக்கின்றன என்பதேயதார்த்தமாகும்.

அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்றும், அரசியல் வேறு, சினிமா வேறு என்றும், அரசியல் வேறு, கலை வேறு என்ற கருத்துக்களை கூறுவவர் தமது சுயநலவாதிகள் அல்லது யாதார்த்தை அறியாதவர்கள்.

பிரித்தானியாவில் இருந்து சங்கரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.