சிங்களப் பரப்புரை படுதோல்வி – டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம், டென்மார்க்

கடந்த ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அப்படுகொலையினைக் கண்ட புலம்பெயர் தமிழர்கள், இதனை நிறுத்துவதற்காகத் தாம் வாழும் நாடுகளில் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்;. அதில் ஒரு வடிவமாக உண்ணாவிரதப் போராட்டங்களும் இருந்தமையை யாவரும் அறிந்ததே.

தமிழ்மக்களின் இப் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் நோக்குடன் சிங்கள ஆட்சியாளர்கள் பல திசைதிருப்பல் நடவடிக்கைகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நாளிதழ்களான வுhந ளுரnஇ னுயடைல ஆயடை இலண்டனில் உண்ணாவிரதமிருந்த திரு சு. பரமேஸ்வரன் அவர்கள் ஆஉனுழயெடனள உணவகத்தின் டிரசபநச சாப்பிட்டுக்கொண்டு, உண்ணாவிரதமிருப்பதாகக் கூறியிருந்தன.

மேற்குறிப்பிட்ட நாளிதழ்கள் தமது தவறுகளை உணர்ந்து பகிரங்க மன்னிப்பு கேட்டு, நஸ்டஈட்டினையும் வழங்க முன் வந்துள்ளன, இது சிங்களத்தின் பிரச்சாரத்தினை ஆராயாமல் முற்றுமுழுதாக நம்பும் அனைத்து ஊடகங்களுக்கும் தகுந்த படிப்பினையாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதே வேளை தமிழர் தாயகத்திலும் சிறீலங்காவிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நஸ்டஈடு வழங்க உள்ளதாகச் சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்கல கூறியிருப்பது, சிங்கள அரசு பத்திரிகையாளர்கள் மீதான படுகொலைகளை ஒத்துக் கொண்டதாகவே நோக்கப்;படுகிறது. இல்லையெனில் சிறீலங்கா அமைச்சருடைய நஸ்டஈடு வழங்கவேண்டும் என்ற விடயம் கேள்விக்குரியதாகிறது.

மேலும் சிறீலங்கா அரசின் இந்தத் தீரமானம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையினை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் அந்நியச்செலாவணியை கைவிடமுடியாத நிலையில், தனது இறையாண்மையைக் கைவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் கட்டளையை ஏற்று சிங்கள அரசு அடிபணிந்து போவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமது படுகொலைகளை மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளமையும், தமிழர் போராட்டம் மீது அவதூறு விளைவிக்க முயன்ற ஊடகங்கள் தமது பிழைகளை; உணர்ந்து, பின் மன்னிப்புக் கோரியுள்ளமையும் விடுதலைப்பாதையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியதாக அமையும்.

பொன். மகேஸ்வரன்
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.