மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று ஐ.நாவுக்கு விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரச உயர் மட்டக் குழுவினர் அடுத்த மாதம் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார்கள்.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து ஆலோசனை பெற ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழு ஒன்றை அமைத்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று ஐ.நாவுக்கு விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

ஐ.நாவின் பொதுச்சபை அடுத்த மாதம் நியூயோர்க்கில் கூடுகின்றது.இப்பொதுச் சபைக் கூட்ட விவாதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் பங்கேற்கின்றார். அதற்காகவே அவரும், பரிவாரங்களும் இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.