புலிகளின் வலையமைப்பை அழிக்க முடியும் ‐ ரொஹான் குணரட்ன

சர்வதேச சமூகத்துடனட் சுமூகமான உறவுகளைப் பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்க முடியும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இன வன்முறை தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கரிசனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், புலிகளை பலவீனப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்க தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்கப்படுகின்றது என்பதனை புலம்பெயர் பெயர் தமிழர்கள் உணரும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வலுவாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான ஆட்கடத்தல் நடவடிக்கைகளை புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரித கதியில் செயற்பட்டு புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்க்காவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாத வகையில் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெருமளவு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புலிகள் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், இதற்கு எதிராக அரசாங்கத் தரப்பினர் வலுவான பிரச்சாரங்களை முன்னெடுக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு இடையில் பிளவு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ருத்ரகுமாரன், நெடியவன் மற்றும் இமானுவல் ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை காணப்படுவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனிடம் பெருந்தொகையான செல்வம் கொட்டிக் கிடப்பதாக வெளியாகும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக செயற்படுவதன் மூலம் இலங்கை குறித்த சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பில் பாதிப்பு ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச சமூககத்துடன் சுமூகமான உறவுகளைப் பேணுவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப்படையினர் பொதுமக்களை வேண்டுமென்ற தாக்கவில்லை எனவும், போராட்டத்தின் போது பொதுமக்கள் இழப்புக்களை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரத்து நானூறு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே தமது மதிப்பீடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.