கனடாவில் வான்புலிகளின் நினைவு வணக்க நிகழ்வு: சிறிலங்கா அரசு எதிர்ப்பு

e0aeb5e0aebee0aea9e0af8de0aeaae0af81e0aeb2e0aebfe0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81கனடா வாழ் தமிழர்களால் வான்புலிகளுக்கு நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கட்டுநாயக்கா மற்றும் கொழும்பு பகுதிகளில் கடந்த மாதம் 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலின் போது பலியான இரு வான் புலிகளுக்கும் கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வின் போது உயிரிழந்த வான்புலிகளின் பெற்றோர் அவர்களின் படங்களுக்கு ஈகச்சுடரேற்றியிருந்தனர்.

இத்தகைய நிகழ்வுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வின் போது விடுதலைப் புலிகளின் கொடியேற்றப்பட்டதுடன் இரு வான்புலிகளின் படங்களும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.