ஐனநாயகத்திற்கு விரோதமான மனிதநேய பணியாளர்களின் கைதுகள்

தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றஞ்சாட்டி ஐரோப்பிய நாடுகளில் மனித நேய பணியாளர்களை கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்வதற்கு தகுந்த காரணமின்றிச் சிறையில் அடைக்கும் தந்திரோபாயத்தை ஈழத்தமிழ் மனித நேயப் பணியாளர்கள் தொடர்பாக மேற்கு ஜரோப்பிய நாடுகள் குறிப்பாக நெதர்லாந்தும் ஜேர்மனியும் நடைமுறைப்படுத்துகின்றன இது தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமது இனத்தின் துயர் துடைக்க உழைக்கும் மனித நேயப் பணியாளர்களை முடக்குவதானது சிறிலங்கா அரசிற்குத் துணை போகும் செயலாகும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சிலர் பல மாத இழுபறிக்குப் பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். மிகுதிப் பேர் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.

இந்த நாடுகளின் ஐனநாயகத்திற்கு விரோதமான செயற்பாட்டால் பல அப்பாவி குடும்பங்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எதிர்நோக்கி துன்பப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதித் துறையின் குறைபாடுகளை இது எடுத்துக் காட்டுகிறது.

சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் மனித நேயப் பணியாளர்கள் கடும் உடல் உளப் பாதிப்புக்களை அனுபவிக்கின்றனர். இந்த நாடுகள் செய்யும் ஜனநாயகத்திற்குப் புறம்பான கைதுகளை மனித உரிமை ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.