புனர்வாழ்வு முகாம்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

வன்னியில் உள்ள இரு புனர்வாழ்வு முகாம்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தர்மபுரம் புனர்வாழ்வு முகாம், நெலுக்குளம் புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றிலேயே அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அவர்கள் இத்தேடுதலில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள்-02 , கையடக்கத் தொலைபேசிகளுக்கான பற்றறிகள் -03,கையடக்கத் தொலைபேசிச் சார்ச்சர்-01,சிம் கார்ட்-01 ஆகியவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அவ்வாறே நெலுக்குளம் புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள்-05,கையடக்கத் தொலைபேசிகளுக்கான பற்றறிகள் -06,கையடக்கத் தொலைபேசிச் சார்ச்சர்-04, சிம் கார்ட்டுகள்-04ஆகியவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.