கொலன்னாவ‐ ஐ.டி.எச் பிரதேசத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டவர் காவற்துறை சார்ஜன்ட் ‐ காவற்துறையினர்

கொலன்னாவ‐ ஐ.டி.எச் பிரதேசத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டவர் காவற்துறை சார்ஜன்ட் என வெல்லம்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தாகவும் பிரதேச மக்களின் தகவலையடுத்து தாம் சடலத்தை மீட்டதாகவும் வெல்லம்பிட்டி காவற்துறைப் பொறுப்பதிகாரி ரஞ்சித் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பன்னல காவற்துறை நிலையத்தில் பணியாற்றி வந்த லசந்த சுதத் பிரியதர்ஷன என்ற காவற்துறை சார்ஜன்ட் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை கைதுசெய்யப்பட்டவில்லை. அத்துடன் கொலைக்கான காரணமும் கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.