திருகோணமலை மாவட்டத்தில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாஸ் எடுத்துக்கொண்டே செல்ல வேண்டும்

இலங்கையில் போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டு இராணுவத்தாலும் அரசாலும் தளர்த்தப்பட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் படிப்படியாக அமுலுக்கு வந்துகொண்டுள்ளன. வாகனச் சோதனை, பயணிகள் சோதனை என ஒவ்வொன்றாக மீள அறிமுகப்படுத்திவரும் நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாஸ் எடுத்துக்கொண்டே செல்ல வேண்டும் என்ற நடைமுறையையும் மீண்டும் கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த பாஸ் நடைமுறையை கடற்படையினர் முற்றாக நீக்கியிருந்தனர். ஆனால் இப்போதோ கடற்கரையிலும் சரி, ஆழ்கடலிலும் சரி மீன்பிடிக்கச் செல்லவேண்டுமானால் கட்டாயம் தமது அனுமதியைப் பெற்றபின்னர் மாத்திரமே மீனவர்களை அனுமதித்து வருகின்றனர் கடற்படையினர். ஆனால் அப்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடைமுறை மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என திருகோணமலையிலிருந்து கிடைக்கின்ற தகவல்கள் கூறுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.