புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல்

poralikal20kalamunai1முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில்  படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. புதுக்குடியிருப்பு கிழக்கு வீதியில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனை பகுதியில் நேற்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முன்நகர்வு முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.