நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய்க்கு செல்ல ஆயுத்தமான நிலையிலிருந்த விமானத்தின் ஆசனம் ஒன்றின் கீழ் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு நாணயங்கள் 12 கோடி ரூபா பெறுமதியென தெரிவிக்கப்படுகிறது.

காபன் கடதாசிகளால் கட்டப்பட்டு 10 பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இந்த வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகள் இடம்பெறுவதாகவும் இலங்கையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் இதுவே மிகப் பெரிய தொகை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.