படையினரால் காடுகளுக்குள் வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பொதுமக்கள்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி நவீன வீட்டுத் தொகுதிகள் வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஏ9 வீதிக்குக் கிழக்கே கொக்காவில் பகுதியில் பாரியளவிலான பாதைகளை அமைத்து காட்டின் உள்பகுதிக்குள் இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றினைவிட இந்தப்பகுதிகளில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய மாடிக் கட்டடங்களும் அமைக்கப்படுவது அறியவந்துள்ளது. இவ்வாறு குடியிருப்புக்களை இரகசியமாக அமைக்கும் பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த விகாரைகளும் நிறுவப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு அமைக்கப்பட்ட விகாரைகளில் ஒன்று முழங்காவிலுக்குக் கிழக்கே “பழைய வன்னி” காட்டுக்குள் படையினரால் பராமரிக்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

படையினரால் காடுகளுக்குள் வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பொதுமக்கள் ஊடாக இத்தகவல் கசிந்துள்ளது. குடியிருப்புக்களைத் துரிதமாக அமைக்கும் பணிகளுடன் புத்த கோயில்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக நம்பிக்கையாக அறியப்படுகிறது.

ஒரு லட்சம் வரையான சிங்களக் குடும்பங்கள் வன்னிப்பகுதியில் குடியமர்த்தப்படுவர் என்று தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.