முன்னாள் புலிகளை உடனும் விடுவிக்க முடியாது – பிரிகேடியர் சுதத்த

கடந்த ஆண்டு போர் முடிவில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்து விடுதலைப் புலிகளுக்கு தாம் புனர்வாழ்வு அளித்து வருவதாகவும் இப்புனர்வாழ்வு நடவடிக்கை நிறைவடைந்ததும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துவரும் அரசு இதுவரை 3000 பேரை விடுவித்துவிட்டதாகவும் தெரிவித்து வருகிறது.
ஆனால் தற்போது புனர்வாழ்வு முகாம்களில் எஞ்சியுள்ள முன்னாள் புலிகளை உடனடியாக விடுவிக்க முடியாது என்றும், தமது புனர்வாழ்வு நடவடிக்கை மிகநீண்ட காலத் திட்டம் எனவும் புனர்வாழ்வுகள் ஆணையாளர் பிரிகேடியர் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார். தற்போது 12 புனர்வாழ்வு நிலையங்களில் 7950 முன்னாள் விடுதலைப் புலிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி இன் கலவரம் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க 5 ஆண்டுகள் வரை சென்றதாகக் கூறியுள்ள சுதத்த ரணசிங்க, ஆகவே முன்னாள் விடுதலைப் புலிகளையும் விடுவிக்க நாளாகும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வாறாயினும் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் புலிகளின் எண்ணிக்கையை மாற்றி மாற்றிக் கூறிவரும் அரசு, தற்போது அவர்களை இப்போதைக்கு விடுவிக்கும் நிலையில் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. கனகாலம் இழுத்தடிக்க நினைக்கும் அரசு அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிக்கும் சதிகளிலும் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.