வடக்கு-கிழக்கில் திடீரென படைமுகாம்கள் அமைப்பது ஏன்!-ஹக்கீம்

போர் முடிவடைந்த பின்பும் வடக்கு கிழக்கில் படை முகாம்கள் திடீர்திடீரென அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் அச் சமடைந்துள்ளனர். இவ்வாறு முகாம்கள் அமைக்கப்படுவது ஏன்? அதற்கான காரணத்தை அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் பேசுகையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
போர் முடிந்த பின்பும் கூட அரசு இரா ணுவ முகாம்களை அமைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

ஒலுவிலில் திடீரென கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நல்ல தண்ணியில் இரா ணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கார ணம் என்ன?
இந்த முகாம்கள் அமைப்பதற்கான காரணத்தை அரசு உள்ளூர் மக்களிடம் தெரிவிக்கவேண்டும என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.