போலி வாகன பதிவு நிலையமொன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகன பதிவு திணைக்களத்துக்கு அருகில் கடந்த பத்து வருட காலமாக நடமாடும் வாகனமொன்றில் செயற்பட்டு வந்த போலி வாகன பதிவு நிலையமொன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போலி நடமாடும் வாகன பதிவு நிலையத்தை கண்டுபிடித்த பொலிஸார், இவ்வாகனத்தில் இருந்து போலி வாகன அனுமதி பத்திரங்கள், பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றுடன் 2 இலட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர்.வாகனத்தில் இருந்த மூவரை கைது செய்துமுள்ளனர்.

60-6199 என்ற இலக்கத்துடன் கூடிய வாகனத்திலேயே இந்த போலி வாகன பதிவு நிலையம் இயங்கி வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் குளியாப்பிட்டிய பிங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் மற்றைய இரு சந்தேக நபர்களும் இராஜகிரிய , நாரஹேன்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.