கனடாவில் நடைபெற்ற தமிழீழச் சுற்றுக்கிண்ணம் – துடுப்பாட்டம் 2010

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுத் துறை பிரிவு மார்க்கம் ரொறன்ரோ துடுப்பாட்ட அமைப்புடன் இணைந்து நடத்திய இரண்டாவது தமிழீழத் துடுப்பாட்டச் சுற்றுக் கிண்ணம் யூலை 31 ஆம்; மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் நாட்கள் ஸ்காபுரோவில் அமைந்துள்ள Goldhawk மற்றும் Muirlands பூங்காகளில் சிறப்புற நடைபெற்றது.

இச்சுற்றுக் கிண்ணத்தில் மொன்றியாலில் இருந்தும் ரொறன்ரோ முழுவதிலும் இருந்து 33 அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன.

சென்ற ஆண்டு தமிழீழக் கிண்ணத்தை வென்ற 101 துடுப்பாட்ட அணி தமிழீழக் கிண்ணத்தை ஒப்படைத்ததைக் தொடர்ந்து அணி வகுப்புடன் போட்டிகள் தொடங்கின.
தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி போட்டியிட்டன.

இறுதி B-Town Boyz அணியும் Tamil Friends அணியும் மோதின. கடுமையான மோதலைத் தொடர்ந்து தமிழீழ வெற்றிக் கிண்ணத்தை B-Town Boyz அணி தட்டிச் சென்றது.

சென்ற ஆண்டு போல இவ்வாண்டும் தமிழீழத் தேசிய அடையாளங்களின் பெயர்களில் சிறந்த வீரருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழீழத்தின் தேசிய மரமாகிய வாகையின் பெயரில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது சுயீவன் லோகநாதனுக்கு வழங்கப்பட்டது. தமிழீழத் தேசியப் பறவையாகிய செண்பகத்தின் பெயரில் சிறந்த பந்துவீச்சாலருக்கான விருது குகதீபன் சதாநந்தநேசனுக்கு வழங்கப்பட்டது. தமிழீழ தேசியப் பூவாகிய கார்த்திகைப் பூவின் பெயரில் சிறந்த sportsmanship -க்கான விருது சஞ்சீவன் பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது. தமிழீழத்தின் தேசிய விலங்காகிய சிறுத்தையின் பெயரில்; சிறந்த பல்துறை வீரர் ((All rounder)) விருது பிரசன்னா பத்மநாதனுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இத்தமிழீழத் துடுப்பாட்டச் சுற்றுக்கிண்ணம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய தமிழ்ச் சமூகத்திற்கும் விளையாட்டு வீரருக்கும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தில் விளையாட்டுத்துறை பிரிவு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

குறிப்பாக உணவு ஆதரவு வழங்கிய Babu Catering, அச்சிட்டு ஆதரவு வழங்கிய BN Signs, வாகன வசதிகள் வழங்கிய திலீசன் அவர்கள், பரிசுகளுக்கு ஆதரவு வழங்கிய San Pro ஆகிய நிறுவனங்களுக்கு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும், பரிசுகளை வழங்கிய Cricket Canada இன் Junior Coordinator ஆன விஜய் சேனாதிராஜா அவர்களுக்கும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழீழச் சுற்றுக் கிண்ணத்தில் ; Trillium Gift of Life Network அமைப்பின் ஆதரவோடு உடல் உறுப்புத் தானம் செய்வதின் முதன்மைத்துவம் பற்றியும் அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன. எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளில் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் தொடர்ந்தும் செயற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மின்னஞ்சல்:info@ctya.org
இணையத்தளம்: www.ctya.org

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.