சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது – உருத்திரகுமாரன்

கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான்.

மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை சிறிலங்கா அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு, கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும் அவருக்கும் எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. நாம் சுயாதீனமான குழுவாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டோம். இவரது கைதுக்கு முன்னரே, உருவாக்கற்குழுவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு என்னைக் கேட்கப்பட்டபோதே பலநாடுகளில் உள்ள சட்டப்பிரச்சினகள் காரணமாக, நான் அவரது கட்டுப்பாட்டிலோ அல்லது வழிகாட்டுதலிலோ செயற்படமுடியாது என்பதனைத் தெரிவித்து, அதில் உடன்பாடு காணப்பட்ட பின்னரே நான் அப்பொறுப்பை ஏற்றிருந்தேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு சுயாதீனமமான அமைப்பு. அதன் கொள்கையும் நடைமுறையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையானவை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான முழுமையான செவ்வி:
கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் தனது முதலமர்வினை மேற்கொண்டதன் பிற்பாடு அதன் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலமர்வில் தனக்கான அரசியல் அபைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும் உடனடியான முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அரசியல் அமைப்பு விவகாரக்குழுஇ அரசியல் அமைப்பு உபகுழுஇ கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பாருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.

நாம் அமைத்துள்ள குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் (convenor) நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் குழுக்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளயும், தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பான திட்டங்களையும் ஆராய்ந்து இக் குழுக்களுக்கென நியமிக்கப்படும் நிபுணர்குழுவின் ஆலோசனையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்புக்களை உருவாக்கும்போது இக் குழுக்கள் இக் கட்டமைப்புக்களோடு ஒருங்கிணைக்கப்படும்.

கேள்வி: இன்று தமிழீழ தாயகத்தில் வாழும் மக்கள் குறிப்பாக வன்னி, தென்தமிழீழ மக்கள் பலத்த மனிதாபிமான சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதுவொரு அவசரமான கவனிப்பினை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல். இந்த அவசர மனிதாபிமானச்சிக்கல் தங்களது செயற்பாடுகளில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளதா? இதனை எவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு கையாளுகின்றது?.

இவ் விடயத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எனினும் எமது மக்களுக்கு நமது உதவிக் கரங்களை நேரடியாக நீட்டுவதில் சில நடைமுறைப்பிரச்சனைகள் தற்போது உள்ளன. சிறிலங்கா அரசு மக்களின் மனிதாபிமானப்பிரச்சனைகளையும் அரசியல் நோக்கம் கொண்டே அணுகுகிறது. இதனால் இவ் விடயத்தில் நாம் அவதானமாக இருப்பது முக்கியம். இவ் விடயத்தில் நாம் இரு முறைககளில் செயற்படுவதற்கான உத்திகளை வகுத்துள்ளோம்.

முதலவது, சிறிலங்கா அரசுக்கு உதவி வழங்கும் நாடுகளையும் அனைத்துலக அமைப்புக்கiளுயும் அணுகி, அவர்ககளின் உதவி எமது மக்களைச் சென்றடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
இரண்டாவது, அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புக்களுடன் இணைந்த வகையில் எமது உதவிகள் மக்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதனை ஆராயந்து செயற்படல்.

நான் கடந்த வாரம் ஒரு அனைத்துலக அரசுசார அமைப்புடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தேன். இச் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அரசு சாரா அமைப்புக்களுடன் ஒரு வகை பங்காளர் ஏற்பாட்டுக்கு வரும் பட்சத்தில்; போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவி வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு இது வாய்ப்பளிக்கும் என்ற கருத்து அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும் நாம் அனைத்துலக அரசுசாரா அமைப்புக்கள் ஊடாக உதவ முற்பட்டாலும் அது சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவுவதாக அமைந்துவிடக்கூடாது என்ற அக்கறை எமக்கு உண்டு. இதனால் இவ் விடயத்தில மிகவும் நன்றாக ஆராய்ந்து, எமது மக்களுக்கு உதவிகள் சென்றடையும் அதேவேளை அது சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு உதவாத வகையில் அமையக்கூடிய வழிமுறைகளை; கண்டறிவதில் நாம முனைப்பாக உள்ளோம்.

கேள்வி: போர் முடிவுற்ற காலகட்டத்தில் கைதாகிய, சரணடைந்த போராளிகள் தொடர்பான தெளிவான தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சர்வதேசரீதியாகவும் போராளிகள் தொடர்பான வலுவான குரல் இதுவரை எழுப்பப்படவில்லை. நாடுகடந்த அரசு இது தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது?

போரின் பேர்து சிறிலங்கா படைகளால் கைதுசெய்யப்பட்டு அல்லது சரணடைந்து கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் மூன்றாவது ஜெனிவாப் பிரகடனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே இவ்விடயத்தில் எமது நிலைப்பாடு.

மேலும், மூன்றாவது ஜெனிவாப் பிரகடனத்தின் 69, 70 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் சிறைக்குள் அடைக்கப்;பட்டிருக்கும் போராளிகள் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும், இவர்களது குடும்ப அங்கத்தவர்கள் இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இருந்த போதும் சிறிலங்கா அரசு இவர்களைப் போர்க்கைதிகளாக கருதி, இவர்களுக்கு அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய எற்பாடுகள் எதனையும் செய்யவில்லை. அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கவில்லை.

அண்மையில் அமைச்சர் குணசேகரா தனது நேர்காணலில் திரு பாலகுமார், திரு யோகி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக உட்கிடக்கையாகக் கூறியுள்ளார். இது தமிழ் மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரு பாலகுமார், திரு யோகி ஆகியோர் உயிருடன் உள்ளனரா என்பதை அறிய வேண்டிய பெர்றுப்பு சர்வதேசத்தலைவர்களுக்கு உண்டு.

கைதிகளாக வைக்கப்பட்டுள்ள போராளிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படுதல், இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்பதனை அறியாது தவிக்கும் குடும்பத்தினருக்கு ஒருவகை ஆறுதலைத் தரும். அவர்களது பாதுகாப்பை ஒரளவுக்காவது உறுதிப்படுத்துவதற்கும் இது உதவும். இவ்விடயத்தினை ஜக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதப்பிள்iளை அவர்கள் தமது கூடுதல் கவனத்தற்கு எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகிறோம். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பெர்றுத்தவரை நாம் இவ்விவகாரத்துக்காக ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைத்துள்ளோம். இவர்கள் இது தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் செயற்பட்டு வருகின்றனர்.

கேள்வி: நாடு கடந்த அரசாங்கம் சர்வதேசசமூகத்துடன் தொடர்பாடல் முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதா?. குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா போன்ற தரப்புக்களுடன் பேச்சுக்களுக்கான முயற்சி ஆரம்பமாகிவிட்டதா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர்.

இதேவேள, அரசாங்கங்களுடன் காத்திரமான உறவாடல்களை மேற்கொள்வதனை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின் “இராசதந்திர முன்னெடுப்புக்களின்; வெற்றியை பலம் தீர்மானிக்கின்றது. பலத்திற்கு முன்னுரிமையும் வலுவான அந்தஸ்தும் உண்டு”. நண்பர்களோ அல்லது எதிரிகளோ உறவுமுறையினைத் தீர்மானிப்பதில் பலம் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு வலுஅயைமாக உருவாகும் போது அது நாடுகளுடன் காத்திரமான உறவுகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வழிகோலும்.

கேள்வி: நாடுகடந்த அரசங்காம் மரபுவழி அரசாங்கங்கள் போன்று செயற்படுவதற்கான துறைகளை இனம்கண்டுள்ளதா? அரசாங்கத்தினை நிறுவனமயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு அரசாங்கம் போன்று இயங்கினாலும் இது மரபு சார்ந்த அரசாங்கங்களை விட அடிப்படையில் வேறுபாடானது. நாம் ஒரு நிலப்பரப்பை ஆளுகை செய்யவில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், வரி விதிப்பு போன்ற பணிகளும் இவ் அரசாங்கத்தின் செயற்படு எல்லைக்குள் உள்ளடங்கவில்லை. இதேNளை, நாம் உருவாக்கியுள்ள செயற்குழுக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவர்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்பின்னர் ஒரு அரசாங்கத்தின் அமைச்சுக்களைப் போல செயற்படுவதற்குள்ளன. அரசுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதைப்போல, நாமும் சட்டவாக்கம் , நிறைவேற்றுகை என இரு வேறுபட்ட நிறுவனக் கட்டைப்பைக் கெண்டதாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி வருகிறோம். ஒரு அரசாங்கத்தினைப்போல திறைசேரியினை உருவாக்கும் நடைமுறையினையும் நாம் ஆரம்பித்துள்ளொம்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களுடனான நாடுகடந்த அரசின் தொடர்பாடல் முறைகள் என்ன?. நாடுகள்வாரியாக அதற்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படையாhன எண்ணக்கரு நாடு கடந்த நிலை என்பதேயாகும். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடுகளின் எல்லைகளைக் கடந்தே தனது பணியை ஆற்றும். இருந்த போதும் இன்று தேச-அரசுகளாக (nation-states) ஒழுங்கமைப்பட்டுள்ள நாடுகளில் செயற்படுவதற்கு எமக்கு நாடுகள் சார்ந்தும் செயற்படுதளம் தேவை. நாம் அந்தரத்தில் தொங்க முடியாது. இந் நாடுகள் சார்ந்த செயற்படுதளம் அந்தந்த நாடுகளுக்கானவையாக மட்டும் இருந்துவிடவும் முடியாது. இவ்விடயத்தில நாம் ஒரு கவனமான சமநிலையைப் பேணவேண்டும்.

தற்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசியல், பண்பாட்டு, விiயாட்டுத் தளங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்களைச் சந்தித்து மக்களோட கருத்துப்பரிமாறி வருகின்றனர். இதற்கான முறைசார் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு புதுமையான எண்ணக்கருவாக உள்ளமையாலும், தமிழர்களாகிய நாமே இதற்கு முன்னோடிகளாக உள்ளமையாலும் உரிய முறைசார் பொறிமுறைகளை உருவாக்கி முடிக்கச் சற்றுக் காலம் தேவைப்படும்.

கேள்வி: இன்று தாயகத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெளிவாகவே கூட்டாட்சி அடிப்படையிலான பேச்சுக்களை சிறீலங்காவுடன் மேற்கொள்ள முனைகின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகடந்த அரசு இந்த நிலைப்பாட்டினை எவ்வாறு பார்க்கின்றது?.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு உட்பட தாயகத்தில் செயற்படும் அமைப்புக்களின் அரசியல் நிலைப்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருகி;றோம். அக்கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழீழ மக்களின் குறுங்கால தேவைகளை கவனத்தில் எடுக்கும் அதேவேளையில் நீண்டகால நலன்கள், பாதுகாப்பு, மேம்பாடு குறித்த கவனம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் வலியுறுத்த விரும்புகின்றோம். பூரண அரசியல் அதிகாரம் இன்றி நாம் எமது மக்ககளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோ அல்லது மேம்பாட்டு நடடிவடிக்கைகளில் ஈடுபடுவதோ நடைமுறைச் சாத்தியமற்றது.

சுதந்திரத் தமிழீழ அரசு அமைவதே தமிழ் மக்கள் கௌரவமாகவும், பர்துகாப்பாகவும், மேம்பாடாகவும், தமது தனிமனித மற்றும் கூட்டு உரிமைகளப் பெற்று வாழ்வதற்கான ஒரேவழி என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். இந் நம்பிக்கை சமீப கால நிகழ்வுகளால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமத்துவம், கூட்டாட்சி போன்ற அடிப்படைகளில் தமிழ்த் தலைவர்களால் மேற்;கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியினைத் தழுவிய வரலாற்றுப் பட்டடறிவில் இருந்துதான் தமிழ் மக்கள் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் அரசியல் முடிவினை எடுத்தனர். தமிழிழத் தனியரசின் தேவைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இன்னும் சொல்லப்போனால், தமிழர் தாயகப்பகுதியை விழுங்கி இனக்கபளீகரம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக இறங்கியுள்ள இவ்வேளை எமக்கான தனிநாட்டுக்கான தேவை அனைவராலும் முன்னரைவிட பெரிதும் உணரப்படுகிறது. ஆனால் அதன் சாத்தியப்பாடு குறித்த சந்தேகமே தற்போது எழுந்துள்ளது. நாம் நம்பிக்கையை இழக்காமல் எமக்கு சாதமான மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்ற உறுதிப்பாட்டுடன் எமது போராட்டத்தைத் தொடர வேண்டும். தாயகத்தில் உள்ள தமிழ்த் தலைவர்கள் தனித் தமிழீழ அரசுக்காக செயற்பட முடியாத நிலை இருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம். இதே நேரம் தமிழீழத் தனியரசுதான் எமது மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு அடிப்படையானது என்ற தொலைநோக்கை (vision) அவர்கள் கைவிடக்கூடாது என நாம் அவர்களை வேண்டுகிறோம்.

கேள்வி: கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் போராளிகள் விடுதலை சார்பான முயற்சிகளை கேபி அவர்கள் சிறீலங்கா அரசுடன் பேசி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. புலம்பெயர்ந்து வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகடந்த அரசாங்கம் இந்த முயற்சியினை எவ்வாறு பார்க்கின்றது? அவருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தொடர்புகள் ஏதாவது உள்ளனவா?

கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான். மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை சிறிலங்கா அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.
நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு, கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும் அவருக்கும் எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. நாம் சுயாதீனமான குழுவாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டோம். இவரது கைதுக்கு முன்னரே, உருவாக்கற்குழுவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு என்னைக் கேட்கப்பட்டபோதே பலநாடுகளில் உள்ள சட்டப்பிரச்சினகள் காரணமாக, நான் அவரது கட்டுப்பாட்டிலோ அல்லது வழிகாட்டுதலிலோ செயற்படமுடியாது என்பதனைத் தெரிவித்து, அதில் உடன்பாடு காணப்பட்ட பின்னரே நான் அப்பொறுப்பை ஏற்றிருந்தேன்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு சுயாதீனமமான அமைப்பு. அதன் கொள்கையும் நடைமுறையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையானவை.

கேள்வி: தத்துவார்த்தரீதியாக தமிழீழத்தினை சாத்தியமாக்க தாங்கள் வகுத்துள்ள காலஎல்லை எது?. வாய்ப்புக்கள் என்ன? சவால்கள் என்ன?

தமிழீழத்தைச் சாத்தியமாக்குவதற்கான கால எல்லையினை முன்கூட்டியே தீர்மானிப்பது கடினமானது. அது உலகில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்பு பட்டது. எனினும் வரலாற்றுப்போக்கினை ஆராய்ந்து பார்க்கும்போது தமிழீழம் சாத்தியமானது என்பதனையும் இரத்தம் சிந்தாத போராட்ட வழிமுறைகள் ஊடாக அதனை வென்றெடுக்க முடியும் என்பதனையும் உணர முடிகிறது.

நான் முன்னர் தெரிவித்திருந்தவர்று சுதந்திரத் தமிழீத்தின் உருவாக்கம் இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் தென்னாசியாவிலும் ஏற்படும் புவிசார் அரசியல் மாற்றங்களுடன் தொடர்பு பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் நலன்களையும் தமிழீழ உருவாக்கத்தினை நிர்ணயம் செய்யக்கூடிய உலக சக்திகளின் நலன்களையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கக்கூடிய நிலைமைகள் தோற்றம் பெறும் என்றே நாம் நம்புகிறோம். இலங்கைத்தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. வல்லரசுகள் இப் பகுதியில் இலங்கைத்தீவினை மையமாக வைத்து தமது நகர்வுகளை மேற்கொள்கின்றன.

இச் சூழல் எமக்கான வாய்ப்புக்களையும் கொண்டு வரக்கூடியது.

மேலும் இன்றைய உலகமயமாதல் சூழலில் சிறிய மற்றும் பலவீனமான அரசுகள் தனித்து உயிர்வாழ முடியாது. புறக்காரணிகள் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கும். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் ஊhடாக இப் புறக்காரணிகள் மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்பு உண்டு.

சிறிலங்கா அரசு மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை இழிவு செய்வது குறித்து அனைத்துலக சமூகத்தின் உணர்வுகளை நாம் இப்போது காண முடிசிறது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கண்டனங்களை அனைத்துலக அரங்கில் எழுப்பி வருகிறது. எனினும் அனைத்துலக அரசியல், நலன்களின் அச்சுக்களில் சுற்றுவது என்பதனை நாம் புரிந்திருக்கிறோம். இப் புரிதலுடன் செயற்பட்டு சிறிலங்கா அரசினை மேலும் அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்துவதற்கு நாம் முயல வேண்டும்.

சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையினை (புநழெஉனைந) அனைத்துலக அரங்கில் நன்கு வெளிப்படுத்தியும், உள்நாடுகளில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றும் புரிந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டும் சிறிலங்காவினை ஒரு காவாலி அரசாக (சழரபந ளவயவந) நாம் அடையாளப்படுத்த வேண்டும். மேலும் இனப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதே என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதனை நீதித்தளத்திலும் அனைத்துலகச் சட்டத்தளத்திலும் முன்வைத்து நாம் செயற்படவேண்டும்.

இவற்றில் நாம் எதிர் கொள்ளும் சவால்கள் அனைத்துலக ஒழுங்கு என்பது நடைமுறையில் அரசுகளுக்கிடையிலான ஒழுங்காக இருப்பதில் இருந்துதான் எழுகின்றன. இவ் உலக ஒழுங்கில் சிறிலங்கா, ஒரு அரசாக இருக்கும் காரணத்தால் சில வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்கிறது. இருந்த போதும் நாமும் உலகில் இடம் பெற்று வரும் மாற்றங்களின் ஊடாக உலக அரசுகளின் துணையுடன் எமக்கான தனிநாட்டை உருவாக்கிக் கொள்ளும் காலம் வந்துதான் தீரும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.