சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 13வது நாளில் தொடருகிறது

தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

சிவந்தன் நடந்து செல்லும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை தாமதமாகவே அவரது நடை பயணம் ஆரம்பித்திருந்தது.

இன்று காலை முதல் நண்பகல்வரை 10 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் இன்று 11 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

  • சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  • மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.