புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகள் பலமிக்கதாகவே உள்ளன: அமெரிக்க ராஜாங்க திணைக்களம்

சர்வதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் – 2009 ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில்,இராணுவ ரீதியாக இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒருவடம் கடந்துவிட்டது எனினும் அதன் நிதி நடவடிக்கைகள் பலமிக்கதாகவே முன்னெடுக்கப்படுவதாக ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மக்களின் உதவிகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிக்கட்டமைப்புகள், பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கத்தினால், புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிதி நெறியாள்கையில் சிக்கல் ஏற்பட்டது.

எனினும் வட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் நிதி திரட்டும் பொருட்டு, விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.