தடுப்பு முகாம்களில் கலாசாரத் திணிப்பு – முன்னாள் போராளிகளுக்கு கண்டிய நடனப் பயிற்சி

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களக் கலாசாரத்தைத் திணிக்கும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, புனர்வாழ்வு முகாம்களில் உள்ள 100 முன்னாள் போராளிகளுக்கு சிங்களவர்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கண்டிய நடனப்பயிற்சி பெற்ற இவர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புனர்வாழ்வு முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகள் சிங்கள மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதுடன், சிறிலங்காவின் தேசியக் கொடிக்கும், தேசிய கீதத்துக்கும் தினமும் மரியாதை செலுத்துவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.