சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை முறித்தது ஐ.தே.க

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்களை நிறுத்திக் கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க முடிவு செய்துள்ளது.

இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசதரப்பு தமது பக்கம் இழுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அடுத்தே ஐ.தே.க இந்த முடிவை எடுத்துள்ளது.

அண்மையில் ஐ.தே.கவின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேசன், திகாம்பரம் ஆகியோரை அரசதரப்பு தமதுபக்கம் இழுத்துக் கொண்டது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பலம் 145 ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றதில் மூன்றல் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு ஆளும்கட்சிக்கு 5 ஆசனங்களே குறைவாக உள்ளன.

இந்தநிலையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுக்களை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை அரசதரப்புக்கு இழுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்தே அண்மைக்காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா அதிபருடன் நடத்தி வந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பேச்சுக்களை இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.