புலம்பெயர் தமிழர்களை உள்வாங்காது தீர்வு சாத்தியம் இல்லை – சிங்கள ஆய்வு

புலம்பெயர் தமிழர்களை உள்வாங்காது தீர்வு சாத்தியம் இல்லை. புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தாமல் இலங்கையில் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு சண்டே லீடரில் ஓர் சிங்கள ஆய்வாளர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வைற் ரோஸ் எனும் சுப்பமாக்கட் இல் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் அங்கு கடமையாற்றும் தமிழர்களிடையே பழகிய விதத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தினை கைவிடவில்லை என்றும், தமிழீழம் தான் சரியான தீர்வு என்பதிலும் உறுதியாக உள்ளனர். என குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் மீண்டும் போர் தொடங்குவதற்கு நாம் உதவி செய்வோம். சிங்கள அரசு தமிழர்க்கு தீர்வை தரும் என நம்பவில்லை என தன்னுடன் கடமையாற்றும் தமிழர்கள் கூறுவதாக அந்த சிங்களவர் கூறுகின்றார்.

ஆகவே சிங்கள அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை உள்வாங்காது பிரச்சினையினை தீர்க்க முனைந்தால் அது மீண்டும் தலையிடியினையே ஏற்படுத்தும். அதாவது அவர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி உதவி செய்து ஆயுத போரை ஆரம்பிப்பார்கள் என கூறியுள்ளார் அந்த சிங்களவர்.

ஆனால் புலம்பெயர் மக்களை சாதாரணமாக திருப்திப்படுத்த முடியாது எனவும் அவர்கள் இப்போதும் விடுதலைப்புலிகளை முழுமையாக ஆதரிக்கின்றார்கள்? தமிழீழமே தீர்வு என சொல்கின்றார்கள். தேவை ஏற்படின் போரை ஆரம்பிக்க முடியும் என கூறுகின்றார்கள். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக நம்பவில்லை.

ஆகவே புலம்பெயர் தமிழர்களை அரசாங்கம் முழுமையாக உள்வாங்கவேண்டும். சிறிலங்கா வருவதற்கு ஊக்குவிக்கவேண்டும். என சிபார்சு செய்துள்ளார் அந்த சிங்களவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.