மூத்த உறுப்பினர் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஆகியோர் பற்றி அரசு மெளனிக்க முடியாது

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் திரு. வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிலைபற்றி அரசு தொடர்ந்தும் மெளனிக்க முடியாது. காரணம் அரசாங்கத்திடம் சரண்டைந்ததற்கான புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.

விடுதலைபுலிகளின் பொறுப்பு நிலை வாய்ந்தவர்கள் அரசாங்க படைகளிடம் பிடிபட்டதும் பல உறுப்பினர்களை அரசு உடனடியாகவே கொலை செய்துவிட்டது.

சிலரை தகவல் பெறுவதற்காகவும் தம் வசம் உள்வாங்கவும் உயிருடன் வைத்திருந்தது சிங்களம். ஆனால் இவர்களது தகவல்களை வெளியிடவில்லை காரணம் தம்வசப்படுத்த முடியாதவர்களை கொலை செய்துவிட்டு போரில் இறந்துவிட்டதாக கூறுவதற்கே.

அந்தவகையில் திரு வே.பாலகுமாரன் அவரது மகன் உட்பட பலரை சித்திரவதை செய்து கொன்றனரா அல்லது இரகசிய சிறையில் உள்ளனரா எனும் கேள்விக்கு சிங்களம் மெளனித்து வருகின்றது. இந்த நிலையில் தான் அவர்களது புகைப்படம் வெளியாகியுள்ளது.

எனவே அரசாங்கம் இதற்கான பதில்களை விரைவில் வழங்கியே ஆகவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.