பசில், கோத்தபய இந்தியா செல்கின்றனர்

சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச சகோதரர்களான பசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, அதிபரின் செயலர் லலித் வீரதுங்கே ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவு, மீள்குடியேற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறுப்படுகிறது.

இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இந்தியா அழைத்துப் பேசியது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்களை சந்தித்தது தொடர்பாக பேசுவதற்காகவும் இந்தக் குழு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.