இலங்கையில் 30 ஆயிரம் பேர் வரையானோர் பாலியல் தொழிலாளர்கள்!

இலங்கையில் நாடு முழுவதும் சுமார் 30,000 – 40,000 பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்று சுகாதாரக் கல்விப் பணியகம் அறிவித்துள்ளது.

பணியகத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி சாந்த ஹெட்டி ஆராய்ச்சி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
பாலியல் தொழிலில் தனிநபர்களும் ஈடுபட்டு வருகின்றனர். நிலையங்களும் இரகசியமாக இயங்குகின்றன.இதனால் துல்லியமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முடியவில்லை.

எனினும் தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின்படி பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 30000 முதல் 40000 வரை இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

தற்போது மசாஜ் நிலையங்கள் என்பன போன்ற பெயரில் பல விபசார நிலையங்கள் செயற்படுகிறன. அத்துடன் வான்கள் ,வாகனங்கள் ஆகியன மூலமும் நடமாடும் பாலியல் சேவையில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.