முகாமில் அடைக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதிக்க வேண்டும் – கெலின்

walter-kalin-outவன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை முகாமுக்குள் அடைத்து வைக்காது சுதந்திரமாக நடமாடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதியான நிபுணர் வோல்டர் கெலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நடைபெற்ற இடம்பெயர்ந்தோர் தொடர்பான கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

போரில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கை தொடர்பாகவும் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளில் இயற்கை அனர்த்தம், மற்றும் போரினால் சமார் 26 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் இருந்து வருகை தந்தவர்கனை முகாம்களுக்குள் கட்டுப்படுத்தி வைக்காது நாட்டின் பிரஜை என்றவகையில் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிவழங்கப்பட வேண்டும்.

சூடான், சோமாலியா போன்ற நாடுகளைப் போன்று தன்னார்வ நிறுவனங்களை தடை செய்திருப்பதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை கூட நிறைவு செய்ய முடியாத நிலையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.