மூஞ்சீறு தான் போக வழியைக் காணவில்லையாம்: ஆனால் பாக்கிஸ்தானுக்கு நிவாரணம்:

இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 18 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இலங்கை விமான படைக்கு சொந்தமான சி – 130 விமானத்தின் மூலம் இந்த பொருட்கள் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இந்தியா உட்பட பாக்கிஸ்தானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசானது, பாக்கிஸ்தான் மேலுள்ள தனது ஆதரவை வெளிக்காட்ட, 18 மெற்றிக் தொண் நிவாரணப் பொருட்க்களை அனுப்பிவைத்துள்ளது.

வன்னியில் இன்னும் எத்தனையோ அகதிகள் உணவிற்கும், மருந்திற்கும் அல்லாடும் நிலையில், பாக்கிஸ்தானுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்கிறது, சிங்களப் பேரினவாத அரசு. மூஞ்சீறு தான் போக வழியைக்காணோம் ஆனால் துடப்பக்கட்டையைக் கொண்டுபோக நினைத்தது போல உள்ளது இலங்கையின் நிலை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.