எங்கு வேண்டுமானாலும் போங்கள் ஆனால் இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள்:- நடிகர் சத்யராஜ்

இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காகச் செல்வது தொடர்பாக நடிகர் சங்கம் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சதயராஜ் இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். இன்று ஆயிரம் விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், ஆயிரம் விளக்கு படத்தில் நடித்துள்ள கதாநாயகி சானா கான், இந்திக்கு போய்விடுவார். இப்போது தமிழில் நடித்த நடிகைகள் எல்லாம் இந்திக்கு போகிறார்கள். நீங்கள் இந்திக்கு போங்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் போங்கள். ஆனால் இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள்.

இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று சொல்கிறார்கள். இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம். இப்போது எந்த நடிகையும் போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமிதாப் பச்சனை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, அவர் இலங்கை பயணத்தை ரத்து செய்தார். அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.