மேர்வின் சில்வா உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தும் சிறிலங்கா சுதந்தரக் கட்சியின் உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் மேர்வின் சில்வா உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளும்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய பல சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த மேர்வின் சில்வா, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் சமுர்த்தி அதிகாரி ஒருவரை மாமாரத்தில் கட்டி வைத்த சம்பவத்தைத் தொடர்ந்த நாடளாவிய ரீதியில் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்தே சிறிலங்கா அதிபர் இந்தமுடிவை எடுத்திருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் சிறிலங்கா அரசாங்கம் இதுதொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவலையும் இன்னமும் வெளியிடவில்லை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.