இந்திய விமானநிலைய அதிகாரசபை பலாலியில் விமானநிலையம் கட்ட விரும்புகிறது

இந்திய விமானநிலைய அதிகார சபையானது இலங்கையில் ஒரு விமானநிலையத்தைக் கட்டத் திட்டமிடுகிறது. இவ்வாறு இது நடந்தால் 30 ஆண்டுகளில் சர்வதேச சந்தைக்குள் நடந்த முதலாவது பிரவேசமாக இது அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்நிறுவனமானது ஏற்கனவே லிபியா மற்றும் ஏமன் நாடுகளில் விமானநிலையங்களைக் கட்டியுள்ளன. தற்போது பலாலியில் ஒரு விமானநிலையத்தைக் கட்ட தாம் சந்தர்ப்பம் எதிர்பார்த்துள்ளதாக அந்நிறுவனத்தில் தலைவர் வி.பி அகர்வால் தெரிவித்துள்ளதோடு, பலாலியில் தாம் ஏற்கனவே ஆய்வுகளை அண்மையில் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள இவ்விமானநிலையத்தை மேம்படுத்துவதற்கு ஒரு ஓடுபாதை மற்றும் பயணிகள் ஏற, இறங்கவென கட்டடம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்றும் இதற்கு கிட்டத்தட்ட 400-500 கோடி ரூபா தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் இந்நிறுவனம் கொல்கத்தா, விசாகப்பட்டினம், புபனேஷ்வர், லக்னோ, இந்தூர், அஹமதபாத், அம்ரிட்சர், குவஹட்டி மற்றும் ஜெய்ப்பூர் விமானநிலைய திட்டங்களைச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.