வெள்ளை வான் கடத்தலில் இருந்து தப்பிய இளைஞன்!

கடத்தி கொலை செய்யப்பட இருந்த இளைஞர் ஒருவர் தனது சாமர்த்தியமான நடவடிக்கையினால் தப்பியுள்ளார்.நேற்று இரவு இந்த சம்பவம் தெல்லிப்பளை பகுதியில் இடம் பெற்றது. நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 8.30 மணியளவில் ஏழாலையில் உள்ள அம்மன் கோவிலில் நடை பெற்ற சப்பரத் திருவிழாவுக்கச் சென்ற ஏழாலையைச் சேர்ந்த கஜன் வயது 21 என்பவர் திருவிழாவைப் பார்த்துவிட்டு தனது மோட்டார் சையிக்கிளில் வீட்டிற்க்குச் செல்ல மோட்டார் சையிக்கிளில் தயராகி உள்ளார்.

இந்த வேளையில் பின்னால் வந்த நபர் ஒருவர் இவருடைய வாயைப் பொத்தியதுடன் மோட்டார் சையிக்கிளில் மற்றுமொருவர் ஏறி மோட்டார் சையிக்கிளை இயக்கிக் கொண்டு சென்றுள்ளார்கள்.

என்ன நடந்தது என அறிவதற்கு முன்னர் இருட்டான ஒரு இடத்தில் மோட்டார் சையிக்கிளை நிறுத்தியதுடன் கடத்தப்பட்ட இளைஞரின் வாயை துண்டு கொண்டு கட்டியதுடன் கைகளையும் பின்னால் கட்டியுள்ளாhகள் .

தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் குறைந்த தெல்லிப்பளை கிழக்கில் உயர் பாதுகாபபு வலயத்திற்க்கு அண்மையாக அமைந்த கட்டுவன் புலம்பாடசாலைக்கு அண்மையாகக் கொண்டு சென்று கழுத்தை வயர் கொண்டு திருகியுள்ளாhகள் .

இந் நிலையில் தனது கைக்கட்டை அவிழத்த குறிப்பி;ட்ட இளைஞர் வாய்கட்டையும் இழுத்துவிட்டு பெரும் குரலில் சத்திமிட்டுள்ளாh.;சத்தததைக்கேட்டு அந்தப் பகுதிக்கு அயலில் உள்ள பொது மக்கள் ஓடி வருவதைக்கண்ட கடத்தல்காரர்கள் உரியவரைவிட்ட தப்பி ஓடியுள்ளாhகள்.

இதனைத் தொடர்ந்து இளைஞரை மீட்ட பொது மக்கள் தெல்லிப்பளைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரனைகளை மேற்க் கொண்ட சுன்னாகம் பொலிசார் குறிப்பி;ட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக்கருதப்படும் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.