புலத்திலிருந்து தாயகம் நோக்கி வணங்கா மண்னின் நடவடிக்கைள் பிரித்தானியாவில் இன்று முதல் ஆரம்பம்

vanagamanஈழத்தில் வாழும் எம் உறவுகளை உலக அரசுகள் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் கைவிட்ட நிலையில் புலத்தில் இருந்து தாயகம் நோக்கி “வணங்கா மண்” என்ற கப்பல் புறப்பட உள்ளது. வணங்கா மண்னின் முதல் நடவடிக்கையாக இன்று முதல் பிரித்தானியாவில் பல பாகங்களிலும் உலர் உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் சேகரிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அந்தவகையில் பிரித்தானியவாழ் தமிழ் மக்களால் பிரித்தானிய மககளிடம் பொருட்கள் சேகரிக்கும் நிலையங்களுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள், நகராட்சி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி ஊழியர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், ஊடகவியளாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட தமிழர் அல்லாதோர் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கியதுடன், இலங்கை உட்பட உலகநாடுகளை வன்மையாக கண்டித்தனர். அத்துடன் “வணங்கா மண்” ஒருங்கினைப்பு குழுவினருக்கு தங்கள் ஆதரவை வழங்கியிருநதது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருபுறம் குண்டு மழையில் சாவிற்க்குள் வாழும் எம் உறவுகளை மறுபுறம் உணவை தடுத்து நிறுத்தி பட்டினிபோடும் சிங்கள பேரினவாத்தின் இனசுத்திகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரிய துண்டுபிரசுரங்கள் வருகைதந்த அணைவருக்கும் வழங்கப்பட்ட்து.

சுணமிக்கு பின்னராக பிரித்தானிய புலம்பெயர் வாழ் தமிழர்கள் அணைவரும் ஒரு சேர தாயகம் நோக்கிய வணங்கா மண் நடவடிகையில் இணைந்திருப்பது குறிப்பிட்த்தக்கது.

பலபாகங்களிலும் உள்ள சேகரிப்பு மையங்களை திறந்து வைத்தோர் விபரங்கள் வருமாறு

ரூட்டிங் சிவயோகம் மண்டபம் :- Mr Sadiq Khan MP, Under-Secretary of State in the Department for Communities and Local Government.

சிறி செல்வ வினாயகர் ஆலயம் :- Mr Toby Boutle Conservative PPA

ஈஸ்காம் நிகழ்வில் :- Mr Neal Pearce By election candidate for (MP) for royal dock Newham Conservative party, Mrs Neal Pearce , Mr Sheik conservative councillor for Hackney, Mr Akram president conservative party East Ham and Mr Graham National Liberal spokes person

என்பில்ட் நாகபூசனி அம்மன் கோயில் நிகழ்வில்:- ஆலய மதகுரு

ஆர்சிக்கு முன்னால்:-Mr Lee Scott MP Ilford North and Clayhall Conservative Leader of the Council Alan Edward Weinberg

தொடர்ந்து பங்களிப்பு செய்வதற்க்காக இன்று முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையங்களின் விபரங்கள் வருமாறு.

Enfield Nagapoosani Ambaal Temple

61-65 Church Lane 

Edmonton

London N9 9PZ                                                                                                                            

மேலதிக தொடர்புகளுக்கு

0044 (0) 20880 80674
0044 (0) 77735 16468

http://www.vannimission.org
info@vannimission.org

07536736053
07536736055
07941157862
07969511792

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.